ADDED : ஜூன் 18, 2024 05:28 AM
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை பகுதியில், மது விலக்கு அமலாக்க போலீசார் நேற்று அதிகாலை ஆய்வு செய்தனர்.
அப்போது, காஞ்சிபுரம், ஒலிமுகமதுபேட்டை பகுதியைச் சேர்ந்த முஸ்தபா, 26. மற்றும் காஞ்சிபுரம் விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த நலிம்கான், 26, ஆகிய இருவரையும் பிடித்து விசாரணை செய்தனர்.
இருவரும், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். முறையாக சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்த, 2,400 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இருவரையும், கைது செய்து விசாரித்து வருகின்றனர்.