/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ நெற்களம் கட்டும் பணி பரந்துாரில் துவக்கம் நெற்களம் கட்டும் பணி பரந்துாரில் துவக்கம்
நெற்களம் கட்டும் பணி பரந்துாரில் துவக்கம்
நெற்களம் கட்டும் பணி பரந்துாரில் துவக்கம்
நெற்களம் கட்டும் பணி பரந்துாரில் துவக்கம்
ADDED : ஜூன் 18, 2024 05:35 AM

பரந்துார்: காஞ்சிபுரம் அடுத்த, மேட்டுப்பரந்துார் கிராமத்தில், அரசு நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, போதிய நெற்களம் வசதி இல்லாமல் உள்ளது.
இதனால், நெல் கொள்முதல் நிலையத்திற்கு வரும் விவசாயிகள், நெல்லை தரையில் கொட்டி உலர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. மேலும், மழை காலத்தில் நெல் மூட்டைகள் நனைந்தால், நெல் முளைப்பு ஏற்பட்டு வந்தது.
இதை தவிர்க்க, நெற்களம் கட்டிக் கொடுக்க வேண்டும் என, விவசாயிகள் இடையே கோரிக்கை எழுந்தது.
இதையடுத்து, 8.60 லட்ச ரூபாய் செலவில்,15 மீட்டர் நீளமும், 15 மீட்டர் அகலமும் கொண்ட நெற்களம் கட்டும் பணி துவக்கப்பட்டு உள்ளது. சொர்ணவாரி நெல் கொள்முதல் பருவத்திற்கு பயன்பாட்டிற்கு வரும் என, பணி ஒப்பந்தம் எடுத்தவர் தெரிவித்தார்.