/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ ராமேஸ்வரம் முதல் காசி வரை காஞ்சி பக்தர்கள் ஆன்மிக பயணம் ராமேஸ்வரம் முதல் காசி வரை காஞ்சி பக்தர்கள் ஆன்மிக பயணம்
ராமேஸ்வரம் முதல் காசி வரை காஞ்சி பக்தர்கள் ஆன்மிக பயணம்
ராமேஸ்வரம் முதல் காசி வரை காஞ்சி பக்தர்கள் ஆன்மிக பயணம்
ராமேஸ்வரம் முதல் காசி வரை காஞ்சி பக்தர்கள் ஆன்மிக பயணம்
ADDED : மார் 11, 2025 11:14 PM

காஞ்சிபுரம்:தமிழக அரசு சட்டசபையில் அறிவித்தபடி, தமிழகம் முழுதும் இருந்து ஹிந்து சமய அறநிலையத் துறையின் ஏற்பாட்டின்படி, பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டு, ராமேஸ்வரம் முதல் காசி வரை அரசு சார்பில், இலவசமாக ஆன்மிக பயணம் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
அதன்படி, காஞ்சிபுரம் மண்டலத்தில் இருந்து, ஆன்மிக பயணத்திற்காக தேர்வு செய்யப்பட்ட 20 முதியோர் பக்தர்கள், காஞ்சிபுரம் குமரக்கோட்டம் முருகன் கோவிலில் இருந்து ராமேஸ்வரம் காசி யாத்திரை ஆன்மிக பயணம் மேற்கொள்வதற்காக, ஹிந்து சமய அறநிலையத் துறை பணியாளர்கள் பாதுகாப்புடன் ராமேஸ்வரத்திற்கு அனுப்பி வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் குமரதுரை, ஆன்மிக பயண வாகனத்தை கொடியசைத்து வைத்து பக்தர்களை வழி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், குமரகோட்டம் முருகன் கோவில் செயல் அலுவலர் கேசவன், மற்றும் ஹிந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள், முதியோர்களின் உறவினர்கள் பங்கேற்றனர்.