/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கழிவுநீரில் குடிநீர் குழாய் பென்னலுாரில் நோய் தொற்று அச்சம் கழிவுநீரில் குடிநீர் குழாய் பென்னலுாரில் நோய் தொற்று அச்சம்
கழிவுநீரில் குடிநீர் குழாய் பென்னலுாரில் நோய் தொற்று அச்சம்
கழிவுநீரில் குடிநீர் குழாய் பென்னலுாரில் நோய் தொற்று அச்சம்
கழிவுநீரில் குடிநீர் குழாய் பென்னலுாரில் நோய் தொற்று அச்சம்
ADDED : ஜூன் 11, 2024 03:01 AM

ஸ்ரீபெரும்புதுார் : ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியம், பென்னலுார் ஊராட்சி, பாரதியார் தெருவில் 50க்கும் அதிகமான வீடுகள் உள்ளன. இந்தநிலையில், இங்கு மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடியது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.
இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, ஊராட்சி ஒன்றிய பொதுக்குழு நிதியின் கீழ், 2023- - 24 நிதியாண்டில், 10 லட்சம் ரூபாய் மதிப்பில், பாரதியார் தெருவில் கழிவுநீர் கால்வாய் கட்டப்பட்டது.
இந்த நிலையில், கழிவுநீர் கால்வாயில் உள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்படவில்லை. மூன்று மின்கம்பங்கள், கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாயின் நடுவில் உள்ளது.
இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர், முறையாக வெளியேர வழியில்லாமல் கால்வாயில் மாதக்கணக்கில் தேங்குகிறது. அதேபோல, அப்பகுதியின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் இருந்து, 'பைப்லைன்' வாயிலாக வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், வீடுகளுக்கு செல்லும் குடிநீர் குழாய், கழிவுநீர் கால்வாயில் செல்கிறது.
கழிவுநீரில் மூழ்கியுள்ள குடிநீர் குழாயில், உடைப்பு அல்லது விரிசல் ஏற்பட்டால், குடிநீரில் கழிவுநீர் கலக்கும் அபாயம் உள்ளது. கழிவுநீர் கலந்த குடிநீரை குடிக்கும் மக்களுக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய் தொற்று பரவும் அச்சத்தில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.
மேலும், கழிவுநீர் கால்வாயில் உள்ள மின்கம்பத்தால், எதிர்வரும் பருவ மழையின் போது, மழைநீர் செல்ல வழியின்றி, வெள்ளநீர் வீடுகளில் புகுந்து, வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாரிகளின் மெத்தன போக்கால் பல லட்சம் ரூபாய் மதிப்பில் செயல்படுத்தபடும் திட்டங்கள், வீணாகுவதாகவும் அப்பகுதியினர் தெரிவித்தனர்.
எனவே, ஆய்வு செய்து, கழிவுநீர் கால்வாய் உள்ள குடிநீர் குழாய் மற்றும் மின்கம்பத்தை மாற்றி அமைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.