/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூரில் சிட்கோ தொழிற்பேட்டை: சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? உத்திரமேரூரில் சிட்கோ தொழிற்பேட்டை: சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா?
உத்திரமேரூரில் சிட்கோ தொழிற்பேட்டை: சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா?
உத்திரமேரூரில் சிட்கோ தொழிற்பேட்டை: சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா?
உத்திரமேரூரில் சிட்கோ தொழிற்பேட்டை: சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா? சட்டசபையில் இன்று அறிவிப்பு வெளியாகுமா?
ADDED : ஜூன் 28, 2024 01:49 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதுார், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை, படப்பை, வாலாஜாபாத் ஆகிய பகுதிகளில் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ், ஸ்ரீபெரும்புதுார், இருங்காட்டுக்கோட்டை, பிள்ளைப்பாக்கம், ஒரகடம், வல்லம் ஆகிய ஐந்து சிப்காட் தொழிற்பூங்காக்கள் இயங்கி வருகின்றன.
அதேபோல் திருமுடிவாக்கம், காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளில் சிட்கோ எனப்படும் தொழிற்பேட்டைகள் இயங்கி வருகின்றன.
கடந்தாண்டு சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பின் போது, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறை சார்பில், காஞ்சிபுரம் வையாவூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்படும் என, அமைச்சர் அன்பரசன் அறிவித்திருந்தார்.
நீண்ட நாட்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டு, தற்போது தான், வையாவூரில் சிட்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஆனால், கிராம மக்கள் அதிகம் வசிக்கும் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில், சிட்கோ தொழிற்பேட்டை அறிவிப்பு வெளியாகும் என, எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், கடந்தாண்டும் உத்திரமேரூரில் சிட்கோ அமைப்பதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. உத்திரமேரூரில் தொழிற்பேட்டை அமைக்கப்படுமா என, உத்திரமேரூர் தி.மு.க.,- - எம்.எல்.ஏ., சுந்தர் ஏற்கனவே சட்டசபையில் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதுவரை அதற்கான அறிவிப்பு வெளியாகாத நிலையில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் துறைக்கான மானிய கோரிக்கை அறிவிப்புகள் இன்று வெளியாகிறது.
இன்று நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில், உத்திரமேரூர் பகுதிக்கு சிட்கோ தொழிற்பேட்டை அறிவிப்பு வெளியாகுமா என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.