/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைப்பு களியனுார் ஊராட்சி தலைவர் ஜமாபந்தியில் மனு அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைப்பு களியனுார் ஊராட்சி தலைவர் ஜமாபந்தியில் மனு
அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைப்பு களியனுார் ஊராட்சி தலைவர் ஜமாபந்தியில் மனு
அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைப்பு களியனுார் ஊராட்சி தலைவர் ஜமாபந்தியில் மனு
அனுமதியின்றி மொபைல் போன் டவர் அமைப்பு களியனுார் ஊராட்சி தலைவர் ஜமாபந்தியில் மனு
ADDED : ஜூன் 28, 2024 01:50 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில். களியனுார் ஊராட்சி தலைவர் வடிவுக்கரசி அளித்த கோரிக்கை மனு விபரம்:
வாலாஜாபாத் ஒன்றியம், களியனுார் ஊராட்சியில், ஆதிதிராவிடர் குடியிருப்பு சர்வே எண் 198/2, 3ல் அரசு கொடுத்த இலவச வீட்டு மனை பட்டாவில் தனியார் மொபைல் போன் உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.
ஊராட்சி, வருவாய்த்துறை, வட்டார வளர்ச்சி அலுவலரின் அனுமதி பெறாமல் டவர் அமைக்கப்பட்டுள்ளது. விண்ணப்பம் ஆன்லைன் வாயிலாக அனுப்பப்படவில்லை.
உரிய ஒப்புதல் இல்லாமல் பொதுமக்களுக்கு இடையூறாக உயர்கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. உரிய விசாரணை செய்து ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து, தவறுதலாக பதிவு செய்யப்பட்ட நிலத்தின் வகைப்பாடு திருத்தம் செய்து, 60 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்கக்கோரி, கிராம மக்கள் சார்பில் சமூக ஆர்வலர் மேகநாதன், ஜமாபந்தியில் அளித்த மனு விபரம்:
கீழ்கதிர்பூர் கிராமத்தில் சர்வே எண் 111/1-ல் வீடு கட்டி, கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக 48 குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.
இந்த இடத்திற்கு ஆதார், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்கள் வைத்துள்ளோம். மேலும், மின் இணைப்பு பெற்று, ஊராட்சிக்கு முறையாக வீட்டு வரி, குடிநீர் வரி செலுத்தி வருகிறோம்.
இது தவிர எங்களுக்கு வேறு நிலமோ, வீட்டு மனையோ ஏதும் கிடையாது. நாங்கள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தி வருகிறோம்.
இந்த இடத்திற்கு பட்டா இல்லாத காரணத்தால், அரசு அறிவிக்கும் எவ்வித சலுகையும் பெற முடியவில்லை. மேலும், இந்த இடம் தவறுதாக கோவில் புறம்போக்கு என பதிவாகியுள்ளது.
கோவிலே இல்லாத இடத்தில், கோவில் புறம்போக்கு என தவறுதலாக பதிவாகியுள்ளதை தகவல் அறியும் சட்டம் வாயிலாக அறியப்பட்டது.
மேலும், 4 ஏக்கர் 82 சென்டில் ஒன்றரை ஏக்கர் மட்டுமே குடியிருப்புக்காக வகைப்பாடு மாற்றம் செய்து, அப்பகுதியில், 60 ஆண்டுகளாக வசிக்கும் மக்களின் நலன் கருதி பட்டா வழங்க கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டு உள்ளது.