/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ விதை பரிசோதனை விவசாயிகளுக்கு அழைப்பு விதை பரிசோதனை விவசாயிகளுக்கு அழைப்பு
விதை பரிசோதனை விவசாயிகளுக்கு அழைப்பு
விதை பரிசோதனை விவசாயிகளுக்கு அழைப்பு
விதை பரிசோதனை விவசாயிகளுக்கு அழைப்பு
ADDED : ஜூன் 28, 2024 01:46 AM
காஞ்சிபுரம்:ஆடி பட்டத்திற்கு, தேர்வு செய்த விதைகளை பரிசோதனை செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட விதை பரிசோதனை அலுவலர் ஜெயராமன் கூறியதாவது:
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், ஆடி பட்டம் சாகுபடி செய்வதற்கு ஏற்ப வேர்க்கடலை, உளுந்து, பச்சைப் பயறு, துவரை, கம்பு, சோளம், சாமை, தினை உள்ளிட்ட விதைகளை, 10 கிராம் சூடோமோனாஸ், 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி என்கிற அளவு விதையுடன் சேர்த்து விதைக்க வேண்டும்.
எனவே, சாகுபடிக்கு தேர்வு செய்த விதைகளை, 100 கிராம் விதை மாதிரி எடுத்து, காஞ்சிபுரம் விதை பரிசோதனை நிலையத்தில், முளைப்புத் திறன், கலப்பு, ஈரப்பதம் ஆகியவற்றை பரிசோதனை செய்து தெரிந்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.