/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ கொசுவர்த்தி தீ பரவி மாற்றுத்திறனாளி பலி கொசுவர்த்தி தீ பரவி மாற்றுத்திறனாளி பலி
கொசுவர்த்தி தீ பரவி மாற்றுத்திறனாளி பலி
கொசுவர்த்தி தீ பரவி மாற்றுத்திறனாளி பலி
கொசுவர்த்தி தீ பரவி மாற்றுத்திறனாளி பலி
ADDED : ஜூன் 25, 2024 11:41 PM
சென்னை, ஆவடி அடுத்த அண்ணனூர், புதிய அண்ணா நகரைச் சேர்ந்தவர் கமலா அம்மாள் மகன் முருகேசன், 45; வெல்டர். இவரின் 20வது வயதில் நோய் வாய்ப்பட்டு, கால்கள் செயலிழந்து மாற்றுத்திறனாளி ஆனார்.
நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல், வீட்டில் உள்ள கட்டில் அருகே கொசுவர்த்தி ஏற்றி வைத்து தூங்கினார். அப்போது, கொசுவர்த்தியில் இருந்து தீ போர்வையில் பட்டு, படுக்கை தீப்பிடித்து எரிந்தது.
அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
நேற்று அதிகாலை முருகேசன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருமுல்லைவாயில் போலீசார் விசாரிக்கின்றனர்.