/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ தங்கையின் இறப்பிற்கு பழி தீர்க்க மூதாட்டியை கொளுத்தியவர் கைது தங்கையின் இறப்பிற்கு பழி தீர்க்க மூதாட்டியை கொளுத்தியவர் கைது
தங்கையின் இறப்பிற்கு பழி தீர்க்க மூதாட்டியை கொளுத்தியவர் கைது
தங்கையின் இறப்பிற்கு பழி தீர்க்க மூதாட்டியை கொளுத்தியவர் கைது
தங்கையின் இறப்பிற்கு பழி தீர்க்க மூதாட்டியை கொளுத்தியவர் கைது
ADDED : ஜூன் 25, 2024 11:41 PM

சென்னை, வியாசர்பாடி, அன்னை சத்யா நகரைச் சேர்ந்தவர் வசந்தா, 65. இவர், கடந்த 30 ஆண்டுகளாக அங்கு வசித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன், வசந்தாவிற்கும், செந்தில்குமாரின் தங்கை செண்பகவல்லிக்கும் தண்ணீர் பிடிப்பில் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில், வசந்தா அவதுாறாக திட்டி அவமானப்படுத்தியதால் மனமுடைந்த செண்பகவல்லி, மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து விசாரித்த எம்.கே.பி.நகர் போலீசார் வசந்தாவை கைது செய்தனர். சரியான சாட்சிகள் இல்லாததால், இந்த வழக்கில் இருந்து வசந்தா விடுவிக்கப்பட்டார்.
இதில் இருந்து, செந்தில்குமார் குடும்பத்தினருக்கும் வசந்தாவிற்கும் கடந்த 10 ஆண்டுகளாக பகை இருந்துள்ளது. இது குறித்து வசந்தா, எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் செந்தில்குமாரை, நேற்று முன்தினம் இரவு காவல் நிலையத்தில் ஆஜராகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த செந்தில்குமார், வசந்தாவின் வீட்டிற்கு சென்று, அவர் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தினார்.
அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு 66 சதவீத தீக்காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர், நேற்று உயிரிழந்தார்.
இதை கொலை வழக்காக பதிவு செய்த எம்.கே.பி.நகர் போலீசார், செந்தில்குமாரை நேற்று கைது செய்தனர்.