/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாவட்ட விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்படுமா? மாவட்ட விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்படுமா?
மாவட்ட விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்படுமா?
மாவட்ட விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்படுமா?
மாவட்ட விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியில் அமைக்கப்படுமா?
ADDED : ஜூன் 12, 2025 01:22 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட விளையாட்டு மைதானம் அமைக்க இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பொழுது போக்கு அம்சத்திற்கு என்று சொல்லும் அளவில் இடம் எதுவும் கிடையாது. விளையாட்டு திடலும் இல்லை.கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மைதானம் மட்டுமே பள்ளி, கல்லுாரி மாணவர்கள் கிரிக்கெட், இறகு பந்து, வாலிபால், கால்பந்து போன்ற பல்வேறு போட்டிகளில் விளையாடுவதற்கு வசதியாக உள்ளது.
பள்ளி கோடை விடுமுறை நாட்களில் மாவட்ட, மாநில அளவிலான கிரிக்கெட், கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளுக்கு, விளையாட்டு ஆர்வலர்கள் அனுமதி பெற்று, பள்ளி மைதானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா, குடியரசு தின விழாக்களும் பள்ளி மைதானத்தில் நடத்தப்படுகிறது.
கடும் கட்டுபாடுகளுக்கு இடையே காலை மற்றும் மாலை நேரங்களில் மட்டுமே பள்ளியின் விளையாட்டு மைதானத்தை இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
முறையான மைதானம் இன்றி விளையாட்டு ஆர்வலர்கள் பெரும்பாலோனர் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.
இந்நிலையில் வீரசோழபுரத்தில் கலெக்டர் அலுவலகம் அருகே விளையாட்டு மைதானம் அமைப்பதற்கு இடம் தேர்வு தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையே மாவட்ட தலைநகரமான கள்ளக்குறிச்சியில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், இளைஞர்கள் முறையாக பயிற்சி பெறும் வகையில் அனைத்து வசதிகளுடன் கூடிய வகையில் விளையாட்டு மைதானம் கள்ளக்குறிச்சியிலேயே அமைக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.