/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
சாலையோர பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து
ADDED : ஜூன் 12, 2025 01:19 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே பஞ்சு மூட்டைகளை ஏற்றிச் சென்ற லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுரை மகுதியை சேர்ந்தவர் காளிராஜ், 38; டிரைவர். இவர், 30 குவிண்டால் பஞ்சு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு சென்னையில் இருந்து கரூருக்கு சென்றார். நேற்று மதியம் 3:00 மணிக்கு உளுந்துார்பேட்டை அடுத்த பரிக்கல் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயங்களின்றி உயிர்த்தப்பினார்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.