/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு வாழ்த்து
ADDED : ஜூன் 12, 2025 01:23 AM

கள்ளக்குறிச்சி : மாநில அளவில் விருது பெற்ற கள்ளக்குறிச்சி மாவட்ட ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கம், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
சேலத்தில் தமிழக உடற்கல்வியாளர் மேம்பாட்டு அறக்கட்டளையின் சார்பில் மாநில அளவில் சிறந்த ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் சார்பில், சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் பாலகிருஷ்ணன், கள்ளக்குறிச்சி அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனர் லட்சுமி, திருநாவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் அகஸ்டின் ராஜா, ரிஷிவந்தியம் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் வளர்மதி, உளுந்துார்பேட்டை பெஸ்கி மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஸ்டெல்லா மேரி காளிங்கராயர் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.