ADDED : செப் 15, 2025 02:42 AM

கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அடுத்த குதிரைச்சந்தல் கிராமத்தில் அ.தி.மு.க., சார்பில் திண்ணை பிரசாரம் நடந்தது.
ஜெ. பேரவை மாவட்ட செயலாளர் ஞானவேல் தலைமை தாங்கினார். செந்தில்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் மோகன், ஒன்றிய செயலாளர்கள் அய்யம்பெருமாள், ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
அ.தி.மு.க., வின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி திண்ணை பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியில் ஜெ.பேரவை ஒன்றிய செயலாளர் ராமதாஸ் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ராஜசேகர், தேவேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் அழகுவேல்பாபு, பிரபு, முன்னாள் எம்.பி., காமராஜ்., இளைஞரணி மாவட்ட செயலாளர்கள் ராஜூவ் காந்தி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.