/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்., 17ல் குறைகேட்பு கூட்டம் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்., 17ல் குறைகேட்பு கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்., 17ல் குறைகேட்பு கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்., 17ல் குறைகேட்பு கூட்டம்
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு அக்., 17ல் குறைகேட்பு கூட்டம்
ADDED : செப் 15, 2025 02:42 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறை கேட்பு கூட்டம் அக். 17 ம் தேதி நடப்பதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான குறை கேட்பு கூட்டம் அக்., மாதம் 17ம் தேதி காலை 10.30 மணிக்கு, கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் திருச்சி மண்டல இணை இயக்குநரால் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அரசு துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் தங்களது கோரிக்கையை மனுவாக எழுதி, ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு அக்., 12ம் தேதிக்குள் கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.