/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம் அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம்
அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம்
அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம்
அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம்
ADDED : செப் 15, 2025 02:42 AM

ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வட்டப்பேரவை கூட்டம் நடந்தது.
வாணாபுரத்தில் நடந்த கூட்டத்திற்கு வட்டத் தலைவர் காஞ்சனாமேரி தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் தெய்வானை, அம்சவள்ளி, ராஜா, முகமது ஹாரிஸ் முன்னிலை வகித்தனர். வட்ட துணைத்தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர் செந்தில்முருகன் துவக்க உரையாற்றினார். மாவட்டத்தலைவர் ரவி, இணைச்செயலாளர்கள் விஜயா, சந்திராமேரி, சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்ட நிர்வாகி அன்பரசன், இணைச்செயலாளர் மணிராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசுத்துறைகளில் உள்ள 5 லட்சம் காலி பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்புதல், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி, எம்.ஆர்.பி., செவிலியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், வாணாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி பொது மருத்துவமனையாக மாற்றுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்ட செயற்குழு உறுப்பினர் ஏயேசுமணி நன்றி கூறினார்.