/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் வசிக்கும் பெண்களும் உரிமை தொகை பெறலாம் கலெக்டர் தகவல் ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் வசிக்கும் பெண்களும் உரிமை தொகை பெறலாம் கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் வசிக்கும் பெண்களும் உரிமை தொகை பெறலாம் கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் வசிக்கும் பெண்களும் உரிமை தொகை பெறலாம் கலெக்டர் தகவல்
ஓய்வூதியம் பெறுவோர் குடும்பத்தில் வசிக்கும் பெண்களும் உரிமை தொகை பெறலாம் கலெக்டர் தகவல்
ADDED : செப் 15, 2025 02:41 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்று வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில், ஓய்வூதியம் பெறும் குடும்பத்தில் வசிக்கும் மகளிரும் உரிமை தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் பெறும் நபர்கள் உள்ள குடும்பத்திலுள்ள மற்ற பெண்கள் பிற தகுதிகளை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
விதவை ஓய்வூதியம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியம், ஆதரவற்ற, கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் மற்றும் 50 வயதுக்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழை பெண்களுக்கான ஓய்வூதியம் ஆகிய ஓய்வூதியங்கள் பெற்று வரும் நபர்கள் உள்ள குடும்பத்தில், மற்ற பெண்களும் பிற தகுதிகளை பூர்த்தி செய்து தற்போது நடந்து வரும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் குடும்ப ரேஷன் கார்டு நகல், ஆதார் கார்டு நகல், வங்கிக்கணக்கு புத்தக நகல் மற்றும் மின் கட்டண ரசீது நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.