/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
சஞ்சீவி ஆஞ்சநேயர், வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 12, 2025 05:07 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுார் சஞ்சீவி ஆஞ்சநேயர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது.
விழாவையொட்டி, நேற்று காலை 6:30 மணிக்கு அஸ்வ பூஜை, கோ பூஜை, கஜ பூஜை ஹோமங்களும், 7.30 மணிக்கு மகா பூர்ணாஹுதி பூஜையும் 8:00 மணிக்கு யாத்ரா தானமும் நடந்தது.
9:00 மணிக்கு கடம் புறப்பாடாகி 9:30 மணிக்கு வரதராஜ பெருமாள் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவில்களில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது.
நிகழ்ச்சியில் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., கலெக்டர் பிரசாந்த், சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் மற்றும் இந்து அறநிலை துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள், ஊர் முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். மாலை சாமியின் திருக்கல்யாண வைபவம் நடந்தது.