/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிலை அலுவலர்கள் குழு அமைப்பு அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிலை அலுவலர்கள் குழு அமைப்பு
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிலை அலுவலர்கள் குழு அமைப்பு
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிலை அலுவலர்கள் குழு அமைப்பு
அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்காக நிலை அலுவலர்கள் குழு அமைப்பு
ADDED : செப் 12, 2025 05:06 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு மாவட்ட நிலை அலுவலர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்படும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்து தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் வகையில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர் வருகையை அதிகரிக்கவும், இதன் மூலம் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தவும் மாவட்ட நிலை அலுவலர்கள் 12 பேர் கொண்ட குழு மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்டது.
மாவட்ட நிலை அலுவலர்கள் கொண்ட இக்குழுவினருக்கு பள்ளிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இப்பள்ளிகளில் மாணவர்கள் தொடர் வருகையை உறுதி செய்வதுடன் மாணவர்கள் பள்ளிக்கு வராமல் இருப்பது கண்டறியப்பட்டால் அதற்கான காரணத்தினை கண்டறிந்து அதனை சரிசெய்ய வேண்டும்.
அந்த மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருவதை உறுதி செய்வதுடன் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை உறுதி செய்து தேர்ச்சி அடைய தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, சி.இ.ஓ., கார்த்திகா உள்ளிட்ட அலுவலர்கள் பங்கேற்றனர்.