/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கோவில் வழிபாடு முன்விரோத தகராறில் 76 பேர் மீது வழக்கு கோவில் வழிபாடு முன்விரோத தகராறில் 76 பேர் மீது வழக்கு
கோவில் வழிபாடு முன்விரோத தகராறில் 76 பேர் மீது வழக்கு
கோவில் வழிபாடு முன்விரோத தகராறில் 76 பேர் மீது வழக்கு
கோவில் வழிபாடு முன்விரோத தகராறில் 76 பேர் மீது வழக்கு
ADDED : செப் 12, 2025 05:07 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கோவில் வழிபாடு தொடர்பான முன்விரோத தகராறில் இரு தரப்பைச் சேர்ந்த 76 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த அகரகோட்டாலம் மற்றும் அணைக்கரைகோட்டாலம் கிராமங்களைச் சேர்ந்த இரு பிரிவினரிடையே மணிமுக்தா அணைக்கரை அருகே உள்ள அய்யனார் கோவிலில் வழிபடுவது தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில் அணைக்கரைகோட்டாலம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அகர கோட்டாலம் பஸ் நிறுத்தத்தில் உள்ள மெடிக்கல் ஷாப்பிற்கு மருந்து வாங்க சென்றார். அப்போது முன்விரோதம் காரணமாக அங் கிருந்த அகரகோட்டாலம் வெங்கடேசன், அந்த பெண் ணிடம் தகராறு செய்துள்ளார்.
இதனையறிந்த அணைக்கரைகோட்டாலம் அழகுப்பிள்ளை, 43; என்பவர் வெங்கடேசனை தட்டிக்கேட்டதால் ஏற்பட்ட தகராறில் ரவி, முருகவேல், சரவணன் உட்பட 9 பேர் சேர்ந்து அழகுபிள்ளையை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனையறிந்த அழகுபிள்ளை தரப்பைச் சேர்ந்த சாந்தரூபன், வெங்கடேசன், முனுசாமி, இளையபெருமாள் உள்ளிட்ட 67 பேர் ஆயுதங்களுடன் அகரகோட்டாலம் சென்று அரவிந்தராஜ் உள்ளிடோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இரு தரப்பு புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீ சார் அகரகோட்டாலம் பகுதி சேர்ந்த 9 பேர் மீதும், அணைக்கரைகோட்டாலம் பகுதி சேர்ந்த 67 பேர் என 76 பேர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.