/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
சிறுமி திருமணத்தை தடுத்து நிறுத்திய வாலிபரை தாக்கிய 4 பேர் மீது வழக்கு
ADDED : செப் 12, 2025 05:07 AM
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு 15 வயது மகள் திருமணம் நிற்க காரணமானவரை குடும்பத்தினருடன் சேர்ந்து தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடகீரனுார் பகு தியைச் சேர்ந்தவர் ஷேக் பாபு மகன் அலிமுல்லா, 31; இவர் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் நடைபெற இருந்த 15 வயது சிறுமியின் திருமணத்தை அதிகாரிகளிடம் தெரிவித்து தடுத்து நிறுத்தியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 5ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி, 35; இவரது மனைவி ரஹீமா பீ, 30; அப்துல் காதர் மகன் பர்கத், 20; சலாம் பாஷா மனைவி சமீம், 40; ஆகியோர், திருமணத்தை ஏன் அரசாங்கத்திற்கு தெரிவித்து நிறுத்தினாய் என கேட்டு அலிமுல்லாவை தாக்கினர்.
புகாரின் பேரில், லியாகத் அலி உட்பட 4 பேர் மீது வடபொன்பரப்பி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.