/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் திருக்கோவிலுார் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
திருக்கோவிலுார் வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம்
ADDED : செப் 15, 2025 02:45 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் தென்பெண்ணையாறு கரையோரம் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவில் 4 எல்லையிலும் ஆஞ்சநேயர் உள்ளிட்ட கோவில் உள்ளது. இதில் தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் வீரஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இக்கோவில் ஆக்கிரமிப்பின் பிடியில் இருந்ததால், நீண்ட காலமாக வழிபாடு நடத்தப்படாமல் இருந்தது.
சமீபத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, திருப்பணிகள் நடந்து, நேற்று மகா கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த மூன்று நாட்களாக பட்டாச்சாரியார்களால் யாகசாலை பூஜைகள் நடத்தப்பட்டு,
நேற்று காலை 6:40 மணிக்கு கடம் புறப்பாடாகி வேத மந்திரங்கள் முழங்க மூலகலசத்திற்கு புனித நீர் ஊற்றப் பட்டது.
ஜீயர் தேகளீச ராமானுஜாச்சாரியார் சுவாமிகள் தலைமையில் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் ஏஜென்ட் கோலாகளன் செய்திருந்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.