/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு
ADDED : செப் 15, 2025 02:44 AM

திருக்கோவிலுார்: தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் ரோட்டரி சங்கம் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற திருக்கோவிலுார் பகுதியைச் சேர்ந்த ஆசிரியர்கள் செல்வகுமார், பாலமுருகன், மகாலட்சுமி ஆகியோருக்கு ரோட்டரி சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது. ரோட்டரி சங்க தலைவர் கோதம்சந்த் தலைமை தாங்கி நல்லாசிரியர் விருது பெற்றவர்களை சால்வை அணிவித்து, கேடயம் வழங்கி கவுரவித்தார்.
முன்னாள் தலைவர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். முன்னாள் தலைவர் வாசன், செயலாளர் ராஜேஷ் குமார், பொருளாளர் காமராஜ், உறுப்பினர்கள் சரவணன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கல்யாண்குமார், மகாவீர்சந்த், சாந்திபால் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பு குழு தலைவர் முத்துக்குமாரசாமி நன்றி கூறினார்.