/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவக்கம் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவக்கம் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு
ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவக்கம் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு
ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவக்கம் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு
ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவக்கம் மாவட்ட செயலாளர்கள் அறிவிப்பு
ADDED : செப் 15, 2025 02:45 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் 2ம் கட்டம் துவங்குவதாக மாவட்ட செயலாளர்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி.மு.க., மாவட்ட செயலாளர் (தெற்கு) வசந்தம் கார்த்திகேயன், (வடக்கு) உதயசூரியன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது;
தமிழ் பண்பாட்டை பறை சாற்றும் கீழடி புறக்கணிப்பு, இந்தி திணிப்பு, தமிழ்நாட்டுக்கான நிதி மறுப்பு, நீட் போன்ற நியாயமற்ற தேர்வுகள், கூட்டாட்சி தத்துவம் சிதைப்பு என தமிழ்நாட்டின் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனை எதிர்த்து தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைக்கும் வகையில் கடந்த ஜூலை 1ம் தேதி, தமிழக முதல்வரால் ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் துவக்கப்பட்டது.
இதுவரை 70 நாட்களில் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் அதில் இணைந்துள்ளனர். தற்போது ஓரணியில் தமிழ்நாடு 2ம் கட்டம் துவங்குகிறது.
இன்று (15ம் தேதி), அண்ணாதுரை பிறந்தநாளையொட்டி, மாவட்ட அளவில் அனைத்து குடும்பங்கள் ஒன்று கூடி, கட்சி முன்மொழியும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவளிப்பதாக உறுதிமொழி ஏற்க வேண்டும். நாளை மறுநாள் 17ம் தேதி கரூரில் நடக்கும் முப்பெரும் விழாவில் முதல்வரால் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுக்கு முழு ஆதரவு அளிக்க வேண்டும்.
தொடர்ந்து வரும் 20 மற்றும் 21ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான விளக்க கூட்டங்கள் நடக்கின்றன. இந்த விழாக்களிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை நமது மாவட்டத்தில் ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள குடும்பத்தினர் அனைவரும் ஒன்று கூடி ஏற்க வேண்டும் என கூறினர்.