/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்; மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்; மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்; மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்; மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
ஏரியை ஆக்கிரமித்து வீடுகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றம்; மூங்கில்துறைப்பட்டு அருகே பரபரப்பு
ADDED : ஜூன் 16, 2025 11:56 PM

கள்ளக்குறிச்சி : மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டு ஏரி நீர்நிலை ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை அகற்றும் பணி நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த புத்திராம்பட்டில் ஏரி நீர்நிலை புறம்போக்கில் சிலர் ஆக்கிரமித்து வீடுகள் கட்டி வசித்து வந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று சங்கராபுரம் மண்டல துணை தாசில்தார் பாண்டியன் தலைமையில் ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளை ஜே.சி.பி., இயந்திரம் மூலம் அகற்றும் பணி நடந்தது. இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
ஆக்கிரமிப்பு அகற்றத்தின்போது, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க திருக்கோவிலுார் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் ஏழுமலை, சிவன்யா ஆகியோரது தலைமையில் 60க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
வருவாய் ஆய்வாளர் திவ்யா, வி.ஏ.ஓ., கோமதி, தஸ்தகீர் உடனிருந்தனர்.