/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 1,186 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு: சி.இ.ஓ., ஆய்வு 1,186 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு: சி.இ.ஓ., ஆய்வு
1,186 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு: சி.இ.ஓ., ஆய்வு
1,186 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு: சி.இ.ஓ., ஆய்வு
1,186 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு: சி.இ.ஓ., ஆய்வு
ADDED : ஜூன் 15, 2025 10:44 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1,186 மையங்களில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள 9 ஒன்றியங்களிலும் 15 வயதுக்கு மேற்பட்ட படிக்க, எழுத தெரியாத நபர்களை கண்டறியும் பணி கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்தது.
அதன்படி, மாவட்டம் முழுதும் கண்டறியப்பட்ட 20 ஆயிரத்து 427 பேருக்கும், பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் பாடம் கற்பிக்கப்பட்டது.
அடிப்படை எழுத்துக்கள் அறிதல், எண்களை அறிதல், எழுத்துக்களை கூட்டிப் படித்தல் தொடர்பாக 7 மாதங்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்ட நிலையில், அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று நடந்தது.
மாவட்டம் முழுவதும் 1,186 மையங்களில் நடந்த தேர்வில், 20 ஆயிரத்து 427 பேர் பங்கேற்றனர். வாசித்தல், எழுதுதல் மற்றும் கணிதம் என 150 மதிப்பெண்ணுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தப்பட்டு, விடைத்தாள் சேகரிக்கப்பட்டது.
தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலம் விடைத்தாள் திருத்தும் பணி 2 நாட்கள் நடைபெற உள்ளது.
இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு அடிப்படை எழுத்தறிவு சான்றிதழ் வழங்கப்படும். தேர்ச்சி பெறாதவர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
உதயமாம்பட்டு பள்ளியில் நடந்த எழுத்தறிவு தேர்வினை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகா பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேர்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் செய்திருந்தார்.