/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி அமைவது... எங்கே? திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்திஉளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி அமைவது... எங்கே? திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி அமைவது... எங்கே? திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி அமைவது... எங்கே? திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி அமைவது... எங்கே? திட்டத்தை செயல்படுத்தாத அதிகாரிகள் மீது மக்கள் அதிருப்தி
ADDED : ஜூன் 16, 2025 11:58 PM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை பஸ் நிலையம், அரசு கல்லுாரி, மின்வாரிய அலுவலகம், கோ-ஆப்டெக்ஸ், புறவழிச்சாலை அமைக்கப்படும் என பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் செயல்பாட்டுக்கு கொண்டு வராததால் அதிகாரிகம் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
உளுந்துார்பேட்டை பகுதி சேலம், சென்னை, திருச்சி, திருவண்ணாமலை, வேலுார், கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளின் மையப்பகுதியாக இருப்பதால் தினசரி 24 மணி நேரமும் ஆயிரக்கணக்கான வாகனங்களின் போக்குவரத்து இருந்து கொண்டே இருக்கும்.
முக்கியத்துவம் வாய்ந்த உளுந்துார்பேட்டையில் இட நெருக்கடி, ஆக்கிரமிப்புகள், போதிய இடவசதியின்றி பஸ் நிலையத்தில் பஸ்கள் நின்று செல்வதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்து வருகிறது. இதனால் புதிய பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், உளுந்தம்பட்டியில் புதிய பஸ் ஸ்டாண்டு கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டது.
பின், அஜீஸ் நகர் ரவுண்டானா அருகே மற்றும் பு.மாம்பாக்கம் அருகே பஸ் ஸ்டாண்டு கொண்டு வரப்படும் எனவும் அதற்கான இடங்களையும் அமைச்சர் வேலு, கலெக்டர் பிரசாந்த் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆனால் அதன் பிறகு புதிய பஸ் ஸ்டாண்டு எந்த இடத்தில் அமையும் என்பதை இதுவரை உறுதியாக கூறப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் கைவிடப்பட்ட நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
அதேபோல் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லுாரி அறிவிக்கப்பட்டு தற்காலிக இடமான சென்னை சாலையில் உள்ள மார்க்கெட் கமிட்டி அருகே அரசு கல்லுாரி துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அரசு கலைக்கல்லுாரி நிரந்தரமாக எந்த இடத்தில் அமையப்போகிறது என்பதையும் இன்று வரை உறுதி செய்யப்படவில்லை.
மேலும் உளுந்துார்பேட்டை பகுதி மக்கள் மின் கட்டணம் செலுத்தவும், மின் பிரச்னை குறித்து தகவல் தெரிவிக்கவும் எம்.எஸ். தக்கா அருகே உள்ள துணை மின் நிலையத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு உளுந்துார்பேட்டை மார்க்கெட் கமிட்டி அருகே நுகர்வோர் மின்கட்டணம் மற்றும் மின் பிரச்னை தொடர்பான தகவல் தெரிவிப்பதற்காக மின் அலுவலகம் திறக்கப்பட்டு செயல்படும் என அறிவித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் உதவி மின் பொறியாளர் அலுவலகம் என பெயர் பலகையும் வைக்கப்பட்டது. பெயர் பலகை வைத்ததோடு சரி, அதன் பிறகு அதற்கான அலுவலகத்தை திறந்து செயல்படுத்துவதற்கான எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதேபோல் இந்த அலுவலகம் அருகே கோ-ஆப் டெக்ஸ் திறக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டதோடு சரி. அதையும் செயல்படுத்தவில்லை.
மேலும், எம்.எஸ். தக்கா பகுதியில் இருந்து திருவெண்ணெய்நல்லுார் சாலையை இணைக்கும் விதமாக புறவழிச்சாலை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையும் செயல்படுத்த அதிகாரிகள் முயற்சிக்கவில்லை. திட்டங்களுக்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர்.