ADDED : மார் 22, 2025 08:48 PM

கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அடுத்த அம்மையகரம் கிராமத்தில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ரங்கராஜன், சவரிராஜ், ஆத்மா குழு தலைவர் கனகராஜ் முன்னிலை வகித்தார். குழந்தைகள் வளர்ச்சி திட்ட வட்டார ஒருங்கிணைப்பாளர் அகிலா வரவேற்றார். நிகழ்ச்சியில் 60 கர்ப்பிணிகளுக்கு புடவை, குங்குமம், மஞ்சள், வளையல் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் சிவா, அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி, மாவட்ட தாய், சேய் நல அலுவலர் சின்னபொண்ணு, ஒன்றிய கவுன்சிலர்கள் சுதா மணிகண்டன், நதியா ராஜேஷ், தி.மு.க., ஒன்றிய அவைத் தலைவர் தங்கவேல், துணைச் செயலாளர்கள் கண்ரோஸ், சோலைமுத்து, தமிழ்ச்செல்வி கோவிந்தன், மாவட்ட பிரதிநிதி பெரியசாமி, ஊராட்சி தலைவர் சிவஞானம், நிர்வாகிகள் சுரேஷ், மாயகண்ணன், கருப்பையா, ராஜேந்திரன், ஆறுமுகம் உட்பட பலர் பங்கேற்றனர்.