Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மருத்துவ மாணவர்கள்ரத்த தான முகாம்

மருத்துவ மாணவர்கள்ரத்த தான முகாம்

மருத்துவ மாணவர்கள்ரத்த தான முகாம்

மருத்துவ மாணவர்கள்ரத்த தான முகாம்

ADDED : மார் 22, 2025 08:47 PM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் பயிலும் மருத்துவ மாணவர்கள் மற்றும் டாக்டர்கள் சார்பில் ரத்த தான முகாம் நடந்தது.

முகாமிற்கு மருத்துவகல்லுாரி முதல்வர் பவானி தலைமை தாங்கினார். டாக்டர்கள் நேரு, பழமலை, ஷமீம், பொற்செல்வி, கணேஷ்ராஜா முன்னிலை வகித்தனர். ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயகுமார் வரவேற்றார். நோய் கூறியியல் துறைத்தலைவர் பிரபா ரத்த தானம் செய்வதன் அவசியத்தை விளக்கினார்.

விபத்தில் காயமடைந்தவர்கள், அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம் ஆகியவற்றிற்கு ரத்தம் அவசியமாக தேவைப்படுகிறது. ஆனால், ரத்த தானம் செய்பவர்களின் விகிதம் குறைந்துள்ளது, எனவே, பொதுமக்கள் அனைவரும் ரத்ததானம் செய்யலாம். இதன் மூலம் உடலுக்கு எவ்வித பிரச்னையும் ஏற்படாது என அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து, டாக்டர்கள் நேரு, தீபா, தென்றல் மற்றும் மருத்துவ மாணவர்கள் பலர் ரத்த தானம் செய்தனர். மொத்தமாக 101 யூனிட் ரத்தம் தானமாக பெறப்பட்டது.

முகாமில் செவிலிய கண்காணிப்பாளர்கள் சரோஜாதேவி, சாந்தி, ஆய்வகநுட்புணர்கள் செல்வம், தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ரத்ததானம் செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us