/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை முகாம் உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை முகாம்
உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை முகாம்
உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை முகாம்
உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை முகாம்
ADDED : மார் 22, 2025 08:51 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் உலகங்காத்தான் ஊராட்சியில் மீண்டும் மஞ்சள் பை திட்ட முகாம் நடந்தது.
முகாமை சின்னசேலம் பி.டி.ஓ., ரங்கராஜன் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். மாசு கட்டுப்பாட்டு வாரியம் உதவி பொறியாளர் ராம்குமார் முன்னிலை வகித்தார். ஊராட்சி தலைவர் சுசீலா குழந்தைவேல் வரவேற்றார்.
முகாமில் உலகங்காத்தான், குடிகாடு, திம்மையாநகர் பகுதிகளில் பள்ளிகள், சமுதாய கூடம் உள்ளிட்ட பொது இடங்களில் குப்பைகள் அகற்றும் பணி நடந்தது. துாய்மைக் காவலர்கள், துப்புரவு பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் கொண்ட 30க்கும் மேற்பட்ட குழுவினர் இப்பகுதிகளில் இருந்த மக்கா குப்பை, மக்கும் குப்பைகளை தரம் பிரித்து அகற்றினர். இதில் 14 கிலோ பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி துகள்கள் உள்ளிட்ட மக்கா குப்பைகள் அகற்றப்பட்டது.
முகாமிற்கான பணிகளை ஊரக வளர்ச்சித்துறை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வில்சன், மாவட்ட திட்டமிடல் அலகு தகவல் தொடர்பாளர் சிந்துஜா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்பாபு ஆகியோர் செய்திருந்தனர். ஊராட்சி செயலாளர் சத்யராஜ் நன்றி கூறினார்.