/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ போலீசாரை கண்டித்து பெண் தர்ணா சேத்தியாத்தோப்பில் பரபரப்பு போலீசாரை கண்டித்து பெண் தர்ணா சேத்தியாத்தோப்பில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பெண் தர்ணா சேத்தியாத்தோப்பில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பெண் தர்ணா சேத்தியாத்தோப்பில் பரபரப்பு
போலீசாரை கண்டித்து பெண் தர்ணா சேத்தியாத்தோப்பில் பரபரப்பு
ADDED : மார் 23, 2025 06:40 AM

சேத்தியாத்தோப்பு, : சேத்தியாத்தோப்பு அருகே வேறொரு பெண்ணை திருமணம் செய்த கணவர் மீது நடவடிக்கை எடுக்காததால், அனைத்து மகளிர் போலீஸ் நிலையம் முன்பு, சகோதரியுடன் பெண் ஒருவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காட்டுமன்னார்கோவில் அருகே சி.அரசூர் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சந்திரன், 47; இவரது மனைவி கீதா, 41; இவர்களுக்கு 15 வயதில் மகள், 12 வயதில் மகன் உள்ளனர்.
இந்நிலையில், பூச்சந்திரன் வேறொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டு காட்டுமன்னார்கோவிலில் குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசில், கீதா புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கீதா, அவரது சகோதரி சங்கீதா என்பவருடன் நேற்று மாலை 4:30 மணியளவில் மகளிர் போலீஸ் நிலைய வாயிலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.