/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ துப்பாக்கியால் வனக்காப்பாளரை சுட்டவர் கைது துப்பாக்கியால் வனக்காப்பாளரை சுட்டவர் கைது
துப்பாக்கியால் வனக்காப்பாளரை சுட்டவர் கைது
துப்பாக்கியால் வனக்காப்பாளரை சுட்டவர் கைது
துப்பாக்கியால் வனக்காப்பாளரை சுட்டவர் கைது
ADDED : மார் 23, 2025 02:00 AM

கள்ளக்குறிச்சி: வனக்காப்பாளரை துப்பாக்கியால் சுட்டு தப்பிய இருவரில், ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன், 29. கிருஷ்ணாபுரம் பிரிவு வனக்காப்பாளரான இவர், நேற்று முன்தினம் இரவு கீழ்குப்பம் அடுத்த பாக்கம்பாடி ஆட்டுப்பண்ணை காப்புக்காட்டில் ரோந்து சென்றார்.
வேட்டைத்தடுப்புக் காவலர் சொக்கலிங்கம் உடன் சென்றார். இரவு, 11:50 மணியளவில், வனவிலங்குகளை வேட்டையாட பைக்கில், துப்பாக்கியுடன் வந்த இருவரை, வேல்முருகன், சொக்கலிங்கம் பிடிக்க முயன்றனர்.
பைக்கில் வந்த நபர்களில் ஒருவர், நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில், வேல்முருகனின் வலதுகால் பாதத்தில் குண்டு பாய்ந்தது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் தப்பினார். பிடிபட்டவரை விசாரித்ததில், சின்னசேலம் அடுத்த குரால் கிராமத்தைச் சேர்ந்த செல்லக்கண்ணு, 43, துப்பாக்கியால் சுட்டவர் பூண்டி பாலசுப்ரமணியன் என தெரியவந்தது.
செல்லக்கண்ணுவை கீழ்க்குப்பம் போலீசில் வனத்துறையினர் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், உரிமம் இல்லாத ஒற்றைக்குழல் நாட்டுத் துப்பாக்கி, பைக்கை பறிமுதல் செய்து, பாலசுப்ரமணியனை தேடி வருகின்றனர்.