/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் காணாமல் போன படித்துறை மீட்கப்படுமா? திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் காணாமல் போன படித்துறை மீட்கப்படுமா?
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் காணாமல் போன படித்துறை மீட்கப்படுமா?
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் காணாமல் போன படித்துறை மீட்கப்படுமா?
திருக்கோவிலுார் தென்பெண்ணை ஆற்றில் காணாமல் போன படித்துறை மீட்கப்படுமா?
ADDED : ஜூன் 16, 2024 11:42 PM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுார், தென்பெண்ணை ஆற்றின் படித்துறையை மீட்டெடுக்க வேண்டும் என பக்தர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலுார், ஆற்றங்கரை நாகரிகத்திற்கு எடுத்துக்காட்டான பழமையான நகரம். கோவில்கள் நிறைந்த அழகிய ஊர். வற்றாத ஜீவ நதியான தென்பெண்ணையில் பக்தர்களும், பொதுமக்களும் ஆற்றில் இறங்கி குளிப்பதற்கு வசதியாக பஸ் நிலையம் எதிரில் ஆற்றில் படித்துறை இருந்தது.
தை திங்கள் உள்ளிட்ட முக்கிய விழா நாட்களில், உலகளந்த பெருமாள் கோவிலில் நடைபெறும் வைபவங்களில் பெருமாள் இந்த படித்துறையின் வழியாக எழுந்தருளி ஆற்றில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.
ஆனால், இன்று படித்துறை இருந்ததற்கான அடையாளமே தெரியாத வகையில் ஆக்கிரமிப்பாளர்கள் மண்ணைக் கொட்டி மூடி, ஆற்றையே ஆக்கிரமித்துள்ளனர்.
கூட்டுக் குடிநீர் திட்டம், ஆற்றின் நடுவே ஆங்காங்கே கட்டப்பட்டு இருக்கும் அணைகள் காரணமாக வற்றாத ஜீவநதி பெரும்பாலான நாட்களில் வறண்டு இருந்தாலும், மழைக்காலங்களில் ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும்.
அப்போது ஆற்றில் இறங்க முடியாமல் ஆக்கிரமிப்பாளர்கள் கொட்டிய மண் சேறும் சகதியுமாகி, பன்றிகள் உலாவும் அசுத்தம் நிறைந்த பகுதியாக பெண்ணையாறு மாறுகிறது.
புண்ணிய நதியில் ஆக்கிரமிப்பாளர்கள் குப்பையை கொட்டும் நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பொதுப்பணித்துறை, நகராட்சி நிர்வாகம் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி படித்துறையை மீண்டும் கொண்டுவந்து பெண்ணையாற்றின் புனிதத்தை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.