/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் ரேஷன் கடை செயல்படுமா? சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் ரேஷன் கடை செயல்படுமா?
சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் ரேஷன் கடை செயல்படுமா?
சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் ரேஷன் கடை செயல்படுமா?
சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் ரேஷன் கடை செயல்படுமா?
ADDED : ஜூன் 16, 2024 11:41 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டடம் 3 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருப்பதால் அப்பகுதி மக்கள் வெவ்வேறு பகுதிகளில் கடைகளுக்கு சென்று பொருட்கள் வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் சமத்துவபுரத்தில் 100க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி ரேஷன் கார்டுதாரர்களுக்காக சமத்துவபுரம் வளாகத்தில் ரேஷன் கடை கட்டடம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
ஆனால் வருவாய்த்துறை சார்பில் அந்த கடைக்கு பொருட்கள் வழங்காமலும், விற்பனையாளர் நியமிக்கப்படாமலும் இருப்பதால் பூட்டிக் கிடக்கிறது.
அப்பகுதி மக்கள் சிறுவங்கூர், ரோடு மாமனந்தல், அரியபெருமானுார் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்கள் வாங்கும் நிலை உள்ளது.
எனவே, பொதுமக்களின் சிரமத்தைப் போக்க சமத்துவபுரம் வளாகத்தில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடையில் பொருட்களை வழங்கி, விற்பனையாளரை பணியமர்த்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்