Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

பட்டா மாற்றம் செய்ய ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ., கைது

ADDED : ஜூலை 04, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி : சிறுவங்கூரில் பட்டா மாற்றம் செய்வதற்கு, 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ.,வை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

கள்ளக்குறிச்சி அடுத்த ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் சக்திவேல், 48; மாற்றுத்திறனாளி. இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பூர்வீக சொத்து, 37 சென்ட் இடம், சிறுவங்கூர் கிராம எல்லையில் உள்ளது.

இந்த இடத்தை சக்திவேல் உட்பட அவரது சகோதரர்கள் 3 பேர் கடந்த 2013ம் ஆண்டு பாகப்பிரிவினை செய்து கொண்ட நிலையில், பட்டா மாற்றம் செய்ய முடிவெடுத்தனர்.

இதற்காக, சக்திவேல் கடந்த 1ம் தேதி ஆன்லைனில் விண்ணப்பித்து, சிறுவங்கூர் வி.ஏ.ஓ., சம்பத் என்பவரை சந்தித்தார். அப்போது, வி.ஏ.ஓ., பட்டா மாற்றம் செய்ய 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து சக்திவேல், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, போலீசாரின் அறிவுரையின் பேரில் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை, நேற்று காலை சிறுவங்கூர் இ-சேவை மையத்தில் இருந்த இடைத் தரகர் மூலம் சக்திவேல் கொடுத்தார்.

அந்த பணத்தை வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சம்பத் வாங்கியபோது, அங்கு மறைந்திருந்து கண்காணித்த லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி., சத்தியராஜ், இன்ஸ்பெக்டர் அருண்ராஜ், சப் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ஆகியோர் சம்பத் மற்றும் இடைத்தரகர் சிறுவங்கூரை சேர்ந்த பிரவீன்குமார், 23; ஆகிய இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர்.

தொடர்ந்து, வி.ஏ.ஓ., அலுவலகத்தில் சோதனை நடத்தினர். அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us