/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தமிழ்நாடு நாள் மாணவர்களுக்கு போட்டி தமிழ்நாடு நாள் மாணவர்களுக்கு போட்டி
தமிழ்நாடு நாள் மாணவர்களுக்கு போட்டி
தமிழ்நாடு நாள் மாணவர்களுக்கு போட்டி
தமிழ்நாடு நாள் மாணவர்களுக்கு போட்டி
ADDED : ஜூலை 04, 2024 12:21 AM
கள்ளக்குறிச்சி :' தமிழ்நாடு நாளையொட்டி வரும் 9ம் தேதி பள்ளி மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சு பேட்டிகள் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட ஜூலை 18ம் தேதியை தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஜூலை 9ம் தேதி கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்தப்படுகிறது.
கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிக்களுக்கான தலைப்புகள் சி.இ.ஓ.,வின் சுற்றறிக்கை மூலம் பள்ளி மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
போட்டிகளில் வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு 10,000 ரூபாய், இரண்டாம் பரிசு 7,000 ரூபாய், மூன்றாம் பரிசு 5,000 ரூபாய் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் இப்போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம்.