Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புளி விளைச்சல் குறைந்ததால் குத்தகைதாரர்கள் ஏமாற்றம்

புளி விளைச்சல் குறைந்ததால் குத்தகைதாரர்கள் ஏமாற்றம்

புளி விளைச்சல் குறைந்ததால் குத்தகைதாரர்கள் ஏமாற்றம்

புளி விளைச்சல் குறைந்ததால் குத்தகைதாரர்கள் ஏமாற்றம்

ADDED : மார் 12, 2025 06:53 AM


Google News
தியாகதுருகம் : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் புளி விளைச்சல் எதிர்பார்த்த மகசூல் இன்றி குறைந்ததால் குத்தகை எடுத்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சாலை ஓரங்களில் புளிய மரங்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகள் அனைத்தும் நான்கு வழி சாலையாக மாற்றப்பட்டபோது புளிய மரங்கள் முற்றிலும் அகற்றப்பட்டு விட்டது.மாநில நெடுஞ்சாலைகளின் விரிவாக்க பணிகளும் பல இடங்களில் தற்போது நடந்து வருவதாலும் சாலையோர மரங்கள் வேரோடு அழிக்கப்பட்டு வருகிறது.

புதிதாக நடப்படும் மரக்கன்றுகள் பெரும்பாலும் வேம்பு, நாவல், வாகை, புங்கை, மகிழ மரம் உள்ளிட்ட நிழல் தரும் மரங்களாகவே உள்ளன. புளிய மரக்கன்றுகள் நடப்படுவது அரிதாகிவிட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் புளிய மரங்களில் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது.

ஆண்டுதோறும் நெடுஞ்சாலை துறை மூலம் புளி மகசூல் குத்தகைக்கு விடப்படுகிறது. புளிய மரங்களில் பழங்கள் தற்போது அறுவடைக்கு தயாராகியுள்ளது. ஆனால் பெரும்பாலான மரங்களில் காய்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.

இதற்கு முக்கிய காரணம் புளிய மரங்கள் அனைத்தும் 60 ஆண்டுகள் பழமையானதாக உள்ளதால் அதன் காய்ப்பு திறன் குறைந்துவிட்டது. புளிய மரங்களை குத்தகை எடுப்பவர்கள் உயிரைப் பணயம் வைத்து பழங்களை உதிர்த்து ஓடுகளை அகற்றி அதன் கொட்டைகளை நீக்கிய பின்னரே விற்பனை செய்ய முடியும். இதன் காரணத்தால் குத்தகை எடுப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைப்பதில்லை.

இதனால் புளிய மர குத்தகை மூலம் அரசுக்கு கிடைத்து வந்த வருவாய் ஆண்டுதோறும் குறைந்து வருவதோடு இதை நம்பி உள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தீர்வாக சாலை ஓரங்களிலும் அரசு தரிசு நிலங்களிலும் புளிய மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு வளர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us