ADDED : மார் 12, 2025 06:52 AM
உளுந்துார்பேட்டை, : உளுந்துார்பேட்டை அருகே அதிவேகத்தில் சென்ற மினி டெம்போ சாலையில் கவிழ்ந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சியை சேர்ந்தவர் மாயபெருமாள் 33. டிரைவர். இவர் நேற்று, மினி டெம்போவில் உரம் மற்றும் மருந்துகளை ஏற்றிக்கொண்டு, திருச்சியில் இருந்து விழுப்புரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.
காலை 11:10 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த வெள்ளையூர் அருகில் அதிவேகத்தில் சென்ற போது, மினி டெம்போ, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது.
இதில் வாகனத்தில் இருந்த, ரூ. 2 லட்சம் மதிப்பிலான உரம் மற்றும் மருந்து பொருட்கள் சாலையில் சிதறின. இதில் டிரைவர் மாயபெருமாள் காயங்கள் இன்றி, உயிர் தப்பினார். தகவல் அறிந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, வாகனத்தை அப்புறப்படுத்தினர்.
இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.