/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தற்காலிக ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்பு தற்காலிக ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்காலிக ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்காலிக ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
தற்காலிக ஆசிரியர் பணியிடம்; விண்ணப்பங்கள் வரவேற்பு
ADDED : ஜூலை 04, 2024 09:59 PM
கள்ளக்குறிச்சி : அரசு பழங்குடியினர் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:
அரசு பழங்குடியின நலத்துறையின் கீழ் இயங்கும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் 58, பட்டதாரி ஆசிரியர் 53, முதுகலை பட்டதாரி ஆசிரியர் 8 என மொத்தம் 119 பணியிடங்கள் தற்காலிகமாக நிரப்பப்பட உள்ளது.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு 18 ஆயிரம் ரூபாய், பட்டதாரி ஆசிரியர்களுக்கு 15 ஆயிரம் ரூபாய், இடைநிலை ஆசிரியர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.
இப்பணியிடங்களுக்கு கல்வித்தகுதியுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆசிரியர்கள் நியமனத்தில் பழங்குடி இனத்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
பழங்குடினர் மற்றும் பட்டியல் இனத்தவர்கள் இல்லையெனில், மற்ற இனத்தவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இதில் தகுதியுள்ள பணி நாடுனர்கள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்தவர்கள் அல்லது பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்களிடம் வரும் 10ம் தேதி மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.