/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வள்ளியம்மை கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா வள்ளியம்மை கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
வள்ளியம்மை கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
வள்ளியம்மை கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
வள்ளியம்மை கல்லுாரியில் வகுப்பு துவக்க விழா
ADDED : ஜூலை 04, 2024 09:59 PM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் வள்ளியம்மை மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நடந்தது.
கல்லுாரி அரங்கில் நடந்த விழாவில், கல்லுாரி முதல்வர் தென்னரசி வரவேற்றார். தலைவர் பூபதி தலைமை தாங்கி கல்வியின் அவசியம், பெற்றோர்களின் பங்களிப்பு, மாணவர்களை செம்மையாக வழி நடத்த வேண்டிய பேராசிரியர்களின் பணி குறித்து விளக்கிப் பேசினார்.
கல்லுாரி துணை முதல்வர் ரீனா, துறை தலைவர்கள் சத்யபிரியா, பொம்மிலா, கவிதா, பவித்ரா, வளர்மதி, பரணி, வாசுகி வாழ்த்திப் பேசினர். ஆங்கிலத்துறை மாணவி பாரதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
தமிழ்த்துறை பேராசிரியர் சுவாமிதேவி நன்றி கூறினார்.