ADDED : ஜூலை 04, 2024 10:00 PM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (மேல்நிலை) நேர்முக உதவியாளராக பணிபுரிந்த கோபி கடந்த மாதம் 30ம் தேதி பணி ஓய்வு பெற்றார்.
கடந்த 1997ம் ஆண்டு ஜி.அரியூர் அரசு பள்ளியில் முதுகலை இயற்பியல் ஆசிரியராக பணியில் சேர்ந்த கோபி, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று பல்வேறு பள்ளிகளில் பணிபுரிந்தார். தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் சி.இ.ஓ., நேர்முக உதவியாளராக பொறுப்பேற்றார்.
கடந்த 27 ஆண்டுகளாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற கோபிக்கு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இதில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் உட்பட பலர் நினைவு பரிசு வழங்கினர்.
கள்ளக்குறிச்சி சி.இ.ஓ., முருகன் பணிநிறைவு பெற்ற கோபிக்கு சால்வை அணிவித்து, வாழ்த்து தெரிவித்தார்.