Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நிறைமதியில் பலத்த காற்று மின்கம்பம் உடைந்து சேதம்

நிறைமதியில் பலத்த காற்று மின்கம்பம் உடைந்து சேதம்

நிறைமதியில் பலத்த காற்று மின்கம்பம் உடைந்து சேதம்

நிறைமதியில் பலத்த காற்று மின்கம்பம் உடைந்து சேதம்

ADDED : ஜூன் 03, 2024 06:24 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி, : நிறைமதி கிராமத்தில் வீசிய பலத்த காற்றில் விளைநில பகுதியில் இருந்த 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன.

கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதி கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் கனமழை பெய்தது. நிறைமதி கிராமத்தில் பலத்த காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. மேலும், விளைநில பகுதியில் இருந்த 7 மின்கம்பங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன.

தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் நேற்று, உடைந்த மின்கம்பங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இன்று மின்கம்பங்களை மாற்றியமைக்கும் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us