ADDED : ஜூன் 03, 2024 06:21 AM

கள்ளக்குறிச்சி, : கள்ளக்குறிச்சி அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தில் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்ற, அதே ஊரைச் சேர்ந்த கண்ணன் மகன் தென்றல், 22; என்பவரை கைது செய்து, அவரிமிடருந்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.