Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

விடுமுறைக்கு பின் இன்று பள்ளிகள் திறப்பு

ADDED : ஜூன் 10, 2024 01:03 AM


Google News
கள்ளக்குறிச்சி : கோடை விடுமுறைக்குப்பின், பள்ளிகள் இன்று திறக்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 699 துவக்கப் பள்ளி, 230 நடுநிலை, 111 உயர்நிலை மற்றும் 135 மேல்நிலை என 1,175 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. கடந்த 2023-24ம் கல்வியாண்டின் பொதுத் தேர்வு முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டது.

தொடர்ந்து, 6ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், கோடை வெயிலின் தாக்கத்தால் ஒத்தி வைக்கப்பட்டது. அதன்படி, இன்று 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது.

இதையொட்டி, பள்ளி வளாகத்தில் புதர்மண்டி கிடக்கும் செடிகளை அகற்றுதல், வகுப்பறை சுத்தம் செய்தல், மின்சாதன பொருட்களை சரிபார்த்தல், கழிவறை சுத்தம், குடிநீர் வசதி, பள்ளமான பகுதிகளை சமன் செய்ததல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், இன்று பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, புத்தகப் பை உள்ளிட்ட அனைத்து விலையில்லா கல்வி உபகரண பொருட்களையும் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us