/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி பலி
ADDED : ஜூன் 09, 2024 04:12 AM
திருக்கோவிலுார் : திருப்பாலபந்தல் அருகே ஏரியில் மீன் பிடித்தவர் நீரில் மூழ்கி இறந்தார்.
திருவண்ணாமலை மாவட்டம், கண்டியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் மகன் ராஜா, 31; அதே பகுதியைச் சேர்ந்தவர் தண்டபாணி மகன் திருமலை, 32; இருவரும் நேற்று முன்தினம் மதியம் சீர்ப்பணந்தல் ஏரியில் மீன் பிடித்தனர்.
மாலை திருமலை வீட்டிற்கு சென்று விட்ட நிலையில், ராஜா வீட்டிற்கு வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ஏரிக்கு சென்று தேடிய போது, ராஜா சேற்றில் சிக்கி இறந்து கிடந்தது தெரியவந்தது.
புகாரின் பேரில் திருப்பாலபந்தல் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.