/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ ரவுண்டானா பணிகள் நிறுத்தம்; தொடரும் விபத்து அபாயம் ரவுண்டானா பணிகள் நிறுத்தம்; தொடரும் விபத்து அபாயம்
ரவுண்டானா பணிகள் நிறுத்தம்; தொடரும் விபத்து அபாயம்
ரவுண்டானா பணிகள் நிறுத்தம்; தொடரும் விபத்து அபாயம்
ரவுண்டானா பணிகள் நிறுத்தம்; தொடரும் விபத்து அபாயம்
ADDED : மார் 12, 2025 09:53 PM

திருக்கோவிலூர்; திருக்கோவிலுார் அருகில், ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கிய வேகத்திலேயே,
நிறுத்தப்பட்டதால் விபத்து அபாயம் தொடர்கதையாகி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருக்கோவிலுார், சந்தப்பேட்டை தீயணைப்பு நிலையம் அருகே ஆசனூர், சங்கராபுரம் சாலை பிரிவு உள்ளது. இந்த மும்முனை சந்திப்பு சாலையில், அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும். அதனால், சாலையை அகலப்படுத்தி, ரவுண்டானா அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலை துறை, ஒரு கோடி மதிப்பீட்டில் ரவுண்டானா அமைக்க டெண்டர் கோரியது. கடந்த ஜனவரியில் அவசர கதியில் போக்குவரத்தை துண்டித்து பணி துவக்கப்பட்டது.
சாலையின் குறுக்கே கல்வெட்டு மட்டுமே அமைக்கப்பட்டது. தொடர்ந்து, அகலப்படுத்தும் பகுதியில் இருந்த மரங்கள் வேருடன் பிடுங்கி எடுத்துச் செல்லப்பட்டதுடன் பணி நிறுத்தப்பட்டது.
கடந்த ஒன்றரை மாதத்துக்கும் மேலாக, பணிகள் நடக்கவில்லை. அரைகுறையாக போடப்பட்ட கல்வெட்டு பகுதியில் ஏற்பட்ட மேடு பள்ளத்தால் விபத்துக்கள் நடக்கின்றன. இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'இரு மாதங்களில் முடிக்க வேண்டிய பணி, மூன்று மாதங்கள் கடந்தும் துவக்க நிலையிலேயே உள்ளது. இதற்கு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் மெத்தனமே காரணம். இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள், ரவுண்டானா அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்' என்றனர்.