/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம்
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம்
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம்
பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தில் மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகள் துவக்கம்
ADDED : மார் 12, 2025 07:06 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் 2.7 லட்சம் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி எம்.பி., மலையரசன் கேள்வி எழுப்பி, பேசியதாவது: தமிழகத்தில் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் துவங்கப்பட்டுள்ள கணக்குகளின் எண்ணிக்கை, மொத்த வைப்புத்தொகை, ரூபே டெபிட் கார்டுகளின் எண்ணிக்கை விபரங்கள் குறித்து தெரிவிக்குமாறு கேள்வி எழுப்பினார்.
அதற்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்து பேசியதாவது:
தமிழகத்தில் 169.57 லட்சம் பிரதான் மந்திரி ஜன்தன் யோஜனா கணக்குகளும், ரூ.5,669.50 கோடி டெப்பாசிட் தொகையும், 122.69 லட்ச பயனாளிகளுக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது. இதில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2.7 லட்சம் கணக்குகளும், ரூ.67.55 கோடி டெப்பாசிட் தொகை மற்றும் 1.58 லட்ச பயனாளிகளுக்கு ரூபே டெபிட் கார்டு வழங்கப்பட்டுள்ளது.
ஓவர் டிராப்ட் வரம்பு ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாகவும், விபத்து காப்பீடு ரூ.2 லட்சமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வங்கிகள் மூலம் கிராமப்புறங்களில் நிதி கல்வி அறிவு முகாம் நடத்தப்படுகிறது.
இவ்வாறு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.