/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மழையால் அணை, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது மழையால் அணை, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது
மழையால் அணை, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது
மழையால் அணை, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது
மழையால் அணை, ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்தது
ADDED : மார் 12, 2025 09:54 PM

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மழையால் அணை, ஏரி உள்ளிட்டவைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று முன்தினம் திடீரென மழை பெய்தது. தொடர்ந்து, நேற்று காலை 6:00 மணி வரை (மி.மீ., அளவில்) கள்ளக்குறிச்சி 146, தியாகதுருகம் 160, விருகாவூர் 91, கச்சிராயபாளையம் 62, கோமுகி அணை 120, மூரார்பாளையம் 51, வடசிறுவளூர் 64, கடுவனுார் 28, மூங்கில்துறைப்பட்டு 27, அரியலுார் 32, சூளாங்குறிச்சி 97, ரிஷிவந்தியம் 49, கீழ்பாடி 72, கலையநல்லுார் 110, மணலுார்பேட்டை 57, மணிமுக்தா அணை 80, வாணாபுரம் 33, மாடாம்பூண்டி 28, திருக்கோவிலுார் 21, திருப்பாலபந்தல் 37, வேங்கூர் 31, பிள்ளையார்குப்பம் 25, எறையூர் 77, உ.கீரனுார் 60 என 1,558 மி.மீ., அளவிற்கு மழை பெய்தது. மாவட்டத்தில் 6.4 செ.மீ., அளவு மழை பதிவானது.
கோமுகி அணை மொத்த கொள்ளளவான 46 அடி உயரத்தில் நேற்று முன்தினம் காலை 32 உயரத்திற்கு தண்ணீர் இருந்தது. நேற்று முன்தினம் பெய்த மழையால் வினாடிக்கு 350 மில்லியன் கன அடி தண்ணீர் அணைக்கு வந்தது. நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி, அணையில் 33 அடி உயரத்திற்கு நீர்மட்டம் உயர்ந்தது.
அதேபோல் சூளாங்குறிச்சி மணிமுக்தா அணை மொத்த கொள்ளளவான 36 அடி உயரத்தில் நேற்று முன்தினம் காலை 27.70 அடி உயரம் நீர் இருந்தது. மழையால் வினாடிக்கு 500 கன அடி நீர் அணைக்கு வந்தது. இதனால், நேற்று மதியம் 1:00 மணி நிலவரப்படி அணையில் 29 அடி உயரத்திற்கு நீர் உயர்ந்தது. அணையின் பாசன கால்வாய் வழியாக வெளியேறிய நீரால் தண்டலை, பெருவங்கூர் ஏரிகள் நிரம்பி உபரி நீர் கோடி வழியாக வெளியேறியது.
தொடர்மழையால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம் மற்றும் கிணறுகளின் நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.