/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ வட பொன்பரப்பியில் கண்டன ஆர்ப்பாட்டம் வட பொன்பரப்பியில் கண்டன ஆர்ப்பாட்டம்
வட பொன்பரப்பியில் கண்டன ஆர்ப்பாட்டம்
வட பொன்பரப்பியில் கண்டன ஆர்ப்பாட்டம்
வட பொன்பரப்பியில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 30, 2024 06:23 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சப் ரிஜிஸ்டாரை கண்டித்து பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த ராவத்தநல்லுர், பிரம்மகுண்டம், உலகலப்பாடி ஆகிய பகுதிகளில் போலியான முறையில் ஆவணங்களை பரிசீலனை செய்யாமல் சப் ரிஜிஸ்டார் பதிவு செய்ததாகவும் அதற்கு துணையாக பத்திர ஆவண எழுத்தாளர்கள் உடைந்தையாக செயல்பட்டதாக கூறி மூங்கில்துறைப்பட்டில், நேற்று 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் போலியாக பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை ரத்து செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என கோஷம் எழுப்பினர்.