ADDED : ஜூலை 30, 2024 06:22 AM
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வீட்டுக்குள் புகுந்த நாக பாம்பை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காப்பு காட்டிற்குள் விட்டனர்.
சங்கராபுரம், வள்ளலார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் புருேஷாத்சிங். நேற்று முன் தினம் இவரது வீட்டிற்குள் 6 அடி நீளமுள்ள நாக பாம்பு புகுந்தது. இதைப்பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று நாக பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.