/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
தரமான சாலை அமைக்க மக்கள் கோரிக்கை
ADDED : மார் 14, 2025 07:43 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகில், தரமான சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள கடுவனூரில் தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், இரு வழி சாலையை, நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த சாலையானது, தரமற்ற முறையில் போடப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி சாலையின் இரு புறங்களிலும் போடப்படும் கழிவு நீர் கால்வாய் தரமற்றதாக உள்ளது. அதனால்,பணிகள் நடக்கும் போதே, சென்ட்டர் மீடியன் மற்றும் கழிவுநீர் கால்வாய் இடிந்து விழுகிறது. இந்த சாலை அமைக்கும் ஒப்பந்ததாரர்களை, நெடுஞ்சாலையத்துறையினர் கண்காணிக்க வேண்டும். அங்கு தரமான சாலையாக அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.